அம்பானி வீட்டு கல்யாணம் : நடைபெற இருக்கும் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் விருந்தினர்களாக வர இருப்பதாக தெரியவந்துள்ளது.
வருகிற ஜூலை-12ம் தேதி (நாளை), ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் மும்பையின் பாந்த்ரா குர்லா சென்டரில் (பிகேசி) உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ஆடம்பரமான திருமணம் செய்ய உள்ளனர். இந்த திருமண கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக மிக முக்கிய அரசியல்வாதிகள், பிரபலங்கள், இசை கலைஞர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பிற முக்கிய நபர்கள் என பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தற்போது, இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் விருந்தினர்களாக கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உலகளவில் பிரபலமான கலைஞர்கள் அவர்கள். அமெரிக்கவின் ஊடகங்களின் ஸ்டாரும், சமூக ஆர்வாளருமான கிம் கர்தாஷினி கலந்து கொள்கிறார்.
அவருடன் அமெரிக்கா ஊடகத்துறையின் பிரபல நட்சத்திரமான மரியோ டெடிவனோவிக்க்கும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அவர்களுடன் பல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களும் அம்பானி வீட்டின் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரியவந்துள்ளது. வருகின்ற ஜூலை 12 முதல் ஜூலை-14 வரை நடைபெற உள்ள திருமணத்திற்கு பிரமாண்டமான வரவேற்புகள், ஏற்பாடுகள் தற்போது வரை நடைபெற்று கொண்டே வருகிறது.
மேலும், தினமும் இந்த அம்பானி வீட்டின் திருமணத்தை குறித்து பேசாதே ஆட்களே இருக்க முடியாது. கடந்த ஜூலை-5 ம் தேதி அன்று கூட உலகெங்கும் பரிட்சயமான பிரபல பாடகரான ஜஸ்டின் பீபர் அம்பானி வீட்டின் கல்யாண இசை விழாவில் பாடி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அந்த விழாவிற்க்காக ரூ.83 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என சில தகவல்களும் வெளியானது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…