பலத்த சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது ஆம்பன்.!
சூப்பர் புயலான ஆம்பன் புயல், அதி தீவிர புயலாக வலுவிழந்து தற்பொழுது மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
தற்பொழுது அங்கு 150-160 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த புயல், மேற்கு வங்கத்தில் சுந்தரபான்ஸ் காடுகளை கடந்து, உட்பகுதியில் மாலை 7 மணிக்கு புயல் வலுஇழப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால், மணிக்கு 150-160 கி.மீ. வேகத்தில் காற்று விசவுள்ளதால், அவ்வப்போது 185 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும், 2 நாட்களுக்கு மத்திய மற்றும் வடக்கு கடல்பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விதித்துள்ளது.
இந்த புயல் தாக்கத்தால், மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேரை அங்குள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.