50,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அமேசான் நிறுவனம்!
50,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அமேசான் நிறுவனம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இந்திய அளவில் இதுவரை, 125,101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,726 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா ஊரடங்கால், பல தொழில் நிறுவனங்கள் வேலையாட்களை குறைத்தும் உள்ளது.
இந்நிலையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவில் தாளிக்கமாக 50,000 பேரை பணியில் அமர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கிடைக்கவும், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கூறியுள்ளது.
மேலும், இந்தியாவில், 2025-க்குள், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த போவதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.