அமேசானில் குவியும் ஆர்டர்கள் மேலும் 75,000 பணியாட்கள் வேலை அமர்த்தம்!

Default Image

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து இருக்கக்கூடிய இந்த நிலையில், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் மே 3 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பொருட்கள் வரத்து இல்லாததால் நாளுக்கு நாள் விலைவாசியும் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே மக்கள் வெளியில் அதிகம் செல்ல முடியாமல் ஆன்லைனில் விண்ணப்பித்து உணவுகள் வாங்கி சாப்பிட தொடங்கிவிட்டனர். தற்போது ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே, இந்நிலையில் ஆன்லைன் விற்பனையில் முன் இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத்தில் ஆர்டர்கள் குவிவதால் மேலும் 75 ஆயிரம் பேரை அமேசான் நிறுவனம் பணியமர்த்த உள்ளதாம். ஏற்கனவே ஒரு லட்சம் ஊழியர்கள் அங்கு அமர்த்தப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் 75 ஆயிரம் பேர் தேவை என்ற அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் மற்ற துறைகளில் வேலை இழந்தவர்கள் தங்கள் நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்