முக்கியச் செய்திகள்

#BREAKING : லேண்டரிலிருந்து ரோவர் தரையிறங்கும் அற்புதமான காட்சி வெளியீடு..!

Published by
லீனா

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.

லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த லேண்டரில் ஆனது 4 பகுதிகள் உள்ளன. 26 கிலோ எடை கொண்ட ரோவரில் 2 பகுதிகள் உள்ளன.

இந்த நிலையில், சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல் பேலோடுகளான இல்சா (ILSA), ரம்பா (RAMBHA) மற்றும் சேஸ்ட் (ChaSTE) ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்ட ட்வீட்டில், “அனைத்து நடவடிக்கைகளும் அட்டவணையில் உள்ளன. அனைத்து அமைப்புகளும் இயல்பானவை. லேண்டர் மாட்யூல் பேலோடுகளான ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன.  ரோவர் மொபைலிட்டி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ப்ராபல்ஷன் மாட்யூலில் SHAPE பேலோட் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.” என்று இஸ்ரோ பதிவிட்டு இருந்தது.

இன்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் 23-ல் நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 லேண்டரை சந்திரயான்-2 வின் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள High – Resolution Camera அழகாக படம்பிடித்துள்ளது. நிலவில் இருக்கும் கேமராக்களிலேயே மிகவும் துல்லியமான கேமரா இதுதான் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நிலவின் மேற்பரப்பில் லெண்டரில் இருந்து சாய்வு பலகை வழியே ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

4 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

5 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

6 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

6 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

7 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

7 hours ago