அமர்நாத் யாத்திரை ஜூலை 1இல் தொடக்கம்…பதிவு ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.!
ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு, ஏப்ரல் 17 ஆம் தேதி பதிவு தொடங்குகிறது.
ஜம்மு-காஷ்மீரில் 62 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31, வரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பதிவு முறைகள், ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் அனைவருக்கும் நிர்வாகம் சிறந்த தரமான சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்கும், மேலும் யாத்திரையை சுமூகமாக நடத்துவதற்கான தங்குமிடம், மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து தரப்படும் என லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) சின்ஹா கூறியுள்ளார்.
ஸ்ரீ அமர்நாத்ஜி யாத்ராவின் செயலி, யாத்திரை, வானிலை மற்றும் ஆன்லைனில் பல சேவைகளைப் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.