அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது .ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் வேலை செய்யும் பெண்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கேரளாவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கேரள அரசு தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு 6 மாத சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிகிக்சைக்காக ரூ.3500 சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என கூறியது.இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் தான் தனியார் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்ப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…