மக்களவையில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது சர்ச்சையாக வெடித்தது.ஏற்கனவே அவர் இவ்வாறு கூறியது சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது மீண்டும் அவர் மக்களவையில் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.அந்த வகையில் பிரக்யா சிங் தாகூர் கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், தீவிரவாதியான கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதியான பிரக்யா கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் ஆகும் என்று தெரிவித்தார்.
பின்பு பாஜக எம்பி பிரக்யா மக்களவையில் தான் கோட்சே கூறியதற்கு மன்னிப்பு தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில், என்னை தீவிரவாதி என குறிப்பிட்ட ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் .எந்த ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது எனது கண்ணியத்தை பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…