மம்தா பானர்ஜி தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான் என வங்காளத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனைவரும் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் பிரச்சாரப் பணிகள் நடைபெற்றபோது அண்மையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், நான் கோழையல்ல, வலிமையான நபர் எனவும், எவ்வளவு காலம் வாழ்கிறனோ அதுவரை ராயல் வங்காளத்தின் புலி போல வாழ்வேன் என பேசியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து இன்று பேசியுள்ள வங்காள பாஜக கட்சியின் தலைவர் திலீப் கோஷ் அவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை ஒரு புலி என கருதுகிறார். ஆனால் அவரது நிலை உண்மையிலேயே ஒரு பூனையின் நிலைதான். அவரது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூட அவருக்கு அஞ்ச மாட்டார்கள் என கூறியுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…