அல்போன்சா மாம்பழத்தின் விலை ஒரு பெட்டிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,500 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அல்போன்சா மாம்பழத்தின் மொத்த விற்பனை சந்தையில் நாளுக்கு நாள் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று சந்தைக்கு சுமார் 35,000 பெட்டிகள் அல்போன்சா மாம்பழங்கள் வந்தன. மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தைக்கு சுமார் 16,000 பெட்டிகள் வந்தன என்று கூறப்படுகிறது.
மும்பை வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் வியாபாரிகள் கூறுகையில், தற்போது தேவகாட், சிந்துதுர்க், ரத்னகிரி, ராய்காட் ஆகிய பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் வருகின்றன. வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, விலையில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது விலை மிகவும் குறைந்துள்ளது.
முன்பு அல்போன்சா மாம்பழங்களின் விலை ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது, ஒவ்வொரு பெட்டிக்கும், 1,500 முதல், 3,500 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது என கூறினர்.
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…