கர்நாடகாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தற்போது வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முதல்முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கர்நாடகாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயில்கள் திறக்கப்பட்டாலும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. நாளை முதல் 52 கோவில்களில் ஆன்லைன் சேவா முன்பதிவு தொடங்கும் என்று முஸ்ராய் துறை மாநில அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…