புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி…!
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை திறக்க சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை .
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில், வழக்கமாக இரவு 11 மணிக்கு மூடப்படும்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், மதுபான கடைகள், புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவை தாண்டி 1 மணி வரை திறக்க கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளோ, இசை நிகழ்ச்சிகளோ நடத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. புத்தாண்டில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை பகுதிகளில், 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.