மகாராஷ்டிராவில் மதுக் கடைகள் திறக்க அனுமதி.!

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மதுக்கடை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதில், மதுக்கடைகள் மூடியதால் குடிமகன்கள் பலர் மது கிடைக்காத விரக்தியில் ரசாயனம் குடித்தும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.
அங்கு 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மதுக்கடை விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
April 13, 2025