தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிப்பு குறையாமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி அதற்கு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கொரோனாவை தடுக்க ஒரு சில நாடுகளில் பிளாசம் சிகிச்சை கையாண்டு வருகின்றனர். அந்த முறையை இந்தியாவும் முயற்சி செய்து வருகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சை மூலம் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பலன் கிடைத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் அறிவுறுத்தி வந்தது. ஆனால் அதற்கான முழு உத்தரவை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 4 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, நெல்லை வேலூரில் போன்ற இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…