பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு அனுமதி – ஐசிஎம்ஆர்

Default Image

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிப்பு குறையாமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி அதற்கு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

கொரோனாவை தடுக்க ஒரு சில நாடுகளில் பிளாசம் சிகிச்சை கையாண்டு வருகின்றனர். அந்த முறையை இந்தியாவும் முயற்சி செய்து வருகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சை மூலம் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பலன் கிடைத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் அறிவுறுத்தி வந்தது. ஆனால் அதற்கான முழு உத்தரவை தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் 4 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, நெல்லை வேலூரில் போன்ற இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை  மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்