சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – ரிசர்வ் வங்கி

இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது.
கொரோனா வைரசால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அப்போது, உலகப் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்றும் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளும். இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வழங்கப்படும். ஏற்கெனவே, வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுபோல, கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். வங்கிக் கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025