மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு இரட்டை வாள் மற்றும் கேடயம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட இரண்டாக பிறந்த சிவசேனா கட்சியின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சிவசேனா கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டனர்.
இதனை தொடர்ந்து கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை முடக்கியது. மேலும், இரு தரப்பும் புதிய கட்சி பெயரை தேர்வு செய்து, சின்னத்தையும் தேர்வு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா – உத்தவ் பாலே சாகிபின் தாக்கரே என கட்சி பெயரையம் , எரியும் ஜோதி சின்னத்தை தேர்தல் சின்னமாகவு தேர்வு செய்தனர்.
அதே போல மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனது கட்சி பெயரை பாலே சாகிபின் சிவசேனா என மாற்றியது. அதனை தொடர்ந்து சூரியன், வாள், அரசமரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் சின்னமாக தேர்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் விருப்பத்தை பரிந்துரை செய்துள்ளனர்.
இதில் தற்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு இரட்டை வாள் மற்றும் கேடயம் அடங்கிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…