நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்திற்கென 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் – அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை.
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் வரும் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாளான செப்டம்பர் 14ல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர். மக்களவை, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் அமரும் இருக்கை, மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை செய்திருத்தல் அவசியம் என்றும் எம்.பி.க்கள் மட்டுமல்ல கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தபின் தொற்று இல்லாத நிலையில்தான் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்திற்கென 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவருக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…