ஆன்லைன் மூலம் அலகாபாத் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள்.!
அலகாபாத் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டுஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒன்பது நாட்களுக்கு பட்டப்படிப்பு தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், நிலுவையில் உள்ள தேர்வுகள் இப்போது ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லக்னோ பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் இறுதி ஆண்டு தேர்வு நடத்த தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.