மதத்தைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு- அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி..!

தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் யாரை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு காதல் ஜோடி இருவரும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், அந்த இளைஞர் இந்து மதத்தை சார்ந்தவர் எனவும், அந்த பெண் ஒரு முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் எனவும் இதனால், பெண்ணின் குடும்பம் திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த இளைஞரின் திருமணத்திற்கு தாய் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் அவரது தந்தை திருமணத்திற்கு அனுமதி அளிக்க வில்லை. இதனால், எதிர்காலத்தில் தங்கள் உயிருக்கு இவர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று கூறி இருவரும் நீதிமன்றத்திடம் பாதுகாப்பு கோரினர்.
இந்த மனு மீதான நீதிபதிகள் மனோஜ் குமார் குப்தா மற்றும் தீபக் வர்மா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு ஆண்,பெண் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல், யாரை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களின் திருமண வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமை இல்லை, அவர்களின் பெற்றோருக்கு கூட திருமண வாழ்க்கையில் தலையிட உரிமை இல்லை என்று கூறினர்.
மேலும், இவருகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களின் பெற்றோர்களாலோ அல்லது வேறு நபர்களாலோ எந்த விதத்திலும் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற விண்ணப்பம் தாக்கல் செய்ததாக அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025