மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் நீதிமன்றம்.!

Default Image

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கபீல் கானை கைது செய்து, கடந்த ஜனவரி 29 முதல் உத்தரபிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கபீல் கானின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறி, கபில் கானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை ரத்து செய்தது, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், கபில் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரபிரதேச போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கபிர் கான் 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்