சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் – தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் உறுதி
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது .பெண் நீதிபதி இந்துமல்கோத்ரா அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மனுக்களை விசாரித்தது.
இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த நிலையில் தற்போது ஏற்றுக்கொள்வதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .