இந்த பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து – தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் 17.5 அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், சில இடங்களில் ரயில்களுக்கு இளைஞர்கள் தீ வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்ததுள்ளது.
The following trains moving from Silaghat Town to Tambaram and from Thiruvananthapuram to Silchar and return will run via the diverted route, as mentioned in the notification, due to violent protests in the jurisdiction of East Central Railway. #AgnipathProtests pic.twitter.com/eDQfSXE4Np
— DRM Chennai (@DrmChennai) June 17, 2022