கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் பத்திரிகைகள் விநியோகம் செய்யவும் , சரக்குகள் கொண்டு செல்லவும் காவல்த்துறையினர் இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சமயத்தில் அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் தடையின்றி கொண்டு செல்லப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.செய்தி தாள்கள் அச்சிடுவதற்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.எனவே தொடர்ந்து வினியோகம் செய்யப்படுவதை அனுமதிஅளிக்க வேண்டும்.
பால் கொள் முதல் மற்றும் விநியோகம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் பொருட்கள் ஆகியவைகளையும் கொண்டுசெல்ல அனுமதிஅளிக்க வேண்டும்.மேலும் மளிகை பொருட்கள், சோப்புகள், கிருமிநாசினிகள், ஹண்ட் வாஷ் ,பேட்டரிகள், சார்ஜர்கள் உள்ளிட்டவையும் கொண்டு செல்ல அனுமதிஅளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…