இவர்களெல்லாம் வெளியே வரக்கூடாது – மத்திய அரசு அறிவிப்பு.!
திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் இருக்கும் நிலையில், மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்த 4 ஆம் கட்ட பொதுமுடக்கத்தில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைக்கான தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. திருமணத்தில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர்வர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்டோர் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணிக்கு முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.