வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் – மோடி புகழாரம்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் மோடி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தொடர்பான தகவல்களை காணொளி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். அதேபோல் பிரதமர் மோடி கடைசியாக நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH
— Narendra Modi (@narendramodi) April 3, 2020
இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்று வெளியிடப்போவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சரியாக 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், இன்று லாக்டவுனின் 10-வது நாளில் இருக்கிறோம். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார். மேலும் வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்று பிரதமர் மோடி புகழ்த்துள்ளார். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் என்றும் பாராட்டியுள்ளார்.