நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சூழலில் வருகின்ற 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையை தற்காலிக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஸ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி மக்களவை கூட்டம் தொடங்கவுள்ளது.
இந்தநிலையில், அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பது குறித்து வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று, மாநிலங்களவை சபாநாயகரும், குடியரசுத் துணை தலைவருமான வெங்கையா நாயுடுவும் அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…