பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம்!!அனைத்து படைகளும் தயார் நிலையில் உள்ளது!!முப்படை அதிகாரிகள்

Published by
Venu
  • அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று இம்ரான் கான் தெரிவித்தார்.
  • இந்திய முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார்.

இந்நிலையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்ககோரி இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.மேலும் இந்தியா பல்வேறு நாடுகளின் முயற்சியை மேற்கொண்டு வரும் சூழலில் இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் அபிநந்தனை விடுவிக்ககோரி அமெரிக்கா , ஜப்பான் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இந்திய முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அதில்  27ம் தேதி காலை 10மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் வந்தன.பாகிஸ்தான் விமானம் முதலில் இந்தியா எல்லையில் அத்துமீறியது.பிப்ரவரி  27-ஆம் தேதி  இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்தோம்.

பாக்கிஸ்தான்  போர் விமானங்களை முறியடிக்க மிக் 21 மற்றும் மிராஜ் 2000 போர் விமானங்கள் சென்றது.தவறான பல தகவல்களை பாகிஸ்தான் அளித்துள்ளது.இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் மாயமானது இந்திய விமானி பாராசூட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் குதித்தபோது அந்த நாட்டு ராணுவத்தால் பிடிபட்டார்.இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளது. பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையே இந்திய ராணுவத்தின் விருப்பம் .எல்லையில் உள்ள அனைத்து படைகளும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago