கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் 3 தமிழக பயணிகள் பயணம் செய்தனர். அந்த 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…