மாநில எல்லைகளை மூடிவிடுங்கள்.! வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து ஏற்கனவே வந்தவர்களை தனிமைப்படுத்தியிருக்க கூறி அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
தற்போது வெளிமாநிலத்தில் வேலைக்காக சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் தங்களது சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்த சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள். அவர்களை எல்லையில் தனிமைப்படுத்தி வைத்திருங்கள். என மத்திய கேபினெட் செயலர் ராஜீவ் கவுபாவும், உள்துறை செயலர் அஜய் பல்லா ஆகியோரும் வீடியோ கான்பிரன்சின் மூலம் அனைத்து மாநில செயலருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.