டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31 வரை மூடல் – மணீஷ் சிசோடியா
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர்-31 வரை மூடப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார். மேலும், பள்ளிகள் மூடப்படுவது குறித்து செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு அக்டோபர் 5 வரை செல்லுபடியாகும்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில், அக்டோபர் 31 வரை டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கான வழிமுறைகளை நான் வெளியிட்டுள்ளேன். இது குறித்த உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்றார்.
மேலும், இது குறித்து ஒரு அறிக்கையில், ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் கல்வி கற்பித்தல் தொடரும் மற்றும் ஊக்குவிக்கப்படும். ஏற்கனவே, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன, மேலும் சில மாணவர்கள் உடல் ரீதியாக பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அதே போல், பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.