ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மத முறைப்படி பூஜை.!

Default Image

இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மத முறைப்படி பூஜை நடைபெற்றது.

ஹரியானா மாநிலம் அம்பலாவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு ஹிந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்டின் ஆகிய அனைத்து மத முறைப்படி பூஜை நடைபெற்றது.  அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளனர். இதனிடையே லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில், இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்க ரஃபேல் விமானம் இணைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் கலந்துகொண்டனர். இந்தியாவுக்கு பலத்தை அதிகரிக்கும் ரஃபேல் போர் விமானங்களை இணைக்கும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி பதாரியா, பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து, விமானப்படை சாகசங்கள் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்