Allpartymeeting: செப்.17ம் தேதி அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம்! – மத்திய அமைச்சர் அறிவிப்பு

Anurag Thakur

செப். 18ம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், 17ம் தேதி அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல், நாட்டின் பெயர் பாரத் என மாற்றம்,  பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த சமயத்தில் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17வது மக்களவையின் 13ஆவது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261ஆவது அமர்வு) செப்டம்பர் 18 முதல் 22 வரை, 5 அமர்வுகளைக் கொண்டதாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தில் நிகழ்ச்சி-நிரல் அறிவிக்கப்படவில்லை. அதாவது, பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த சிறப்பு கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செப். 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், செப்.17ம் தேதி அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்துக்கு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்