வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 18ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது பற்றி 18ம் தேதி பாஜக ஆலோசனை மேற்கொள்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருந்தார். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…