நாளை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். அனைத்து கட்சி கூட்டம் நிறைவடைந்த பிறகு டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களிடம் அனைத்து கட்சி கூட்டம் குறித்து பேட்டியளித்தனர்.
அவர் கூறுகையில், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள், திமுக சார்பில் நானும் (டி.ஆர்.பாலு), திருச்சி சிவாவும் கலந்துகொண்டோம். திமுக தலைவர் (மு.க.ஸ்டாலின் ) அறிவுறுத்தலின் பெயரில் கூட்டத்தொடரில் என்னென்ன பேச வேண்டும் என விரிவாக எடுத்துரைத்துள்ளோம்.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கேட்டுள்ளோம். அரசியல் அமைப்பு சட்டதிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளோம். 5 வருடமாக கவன ஈர்ப்பு தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்திய குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம். அது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என நோட்டீஸ் கொடுக்க உள்ளோம். ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் மட்டுமே பேசி வருகின்றனர். இந்த நடைமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. இது குறித்தும் விவாதம் நடத்த கோரியுள்ளோம்.
கடந்த 2019ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நட்டினார். ஆனால், அறிவித்ததோடு மட்டுமே எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிற்கிறது. இந்த திட்டம் 5 வருடமாக கிடப்பில் உள்ளது. இதுகுறித்து கூட்டத்தொடரில் பேச வேண்டும்.
சேதுசமுத்திர திட்டம் தொடங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அனால் அந்த திட்டம் குறித்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்து விவாதிக்க வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாக உள்ளது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அதனை 3000 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி உள்ளோம் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…