ஜன.13ல் அமித் ஷாவுடன் அனைத்து கட்சி குழு சந்திப்பு!
டெல்லியில் ஜனவரி 13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13ம் தேதி பிற்பகல் 3.30 அமித் ஷாவை சந்திக்கிறது அனைத்துக்கட்சி குழு. சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறு அமித் ஷாவை சந்தித்து அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தவுள்ளது.
வெள்ள பாதிப்புகளுக்கான மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.19,692 கோடி உடனே வழங்க வேண்டும் எனவும் எம்பிக்கள் குழு வலியுறுத்த உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சங்கராச்சாரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்!
இதுபோன்று, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்கு ரூ.18,214 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி கோரி அரசு சார்பில் 2 மனுக்கள் அளித்த பிறகும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை நிதி பெறப்படவில்லை என அரசு தரப்பில் குற்றசாட்டியுள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தபோது நேரடியாகவே முதலமைச்சர் முக ஸ்டாலின், நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த சூழல், ஜனவரி 13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது.