வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு ! கேரள பாஜக அதிர்ச்சி

Default Image

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவிக்காததால் கேரள பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. 

3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில்   தீர்மானத்தை நிறைவேற்றினார். சபையின் சிறப்பு கூட்டத்தில் குரல் வாக்கு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏ தீர்மானத்தை எதிர்க்கவில்லை. தீர்மானத்தின் சில வாசகங்களை மட்டும் தான் எதிர்த்தார்.மேலும் ராஜகோபால் வெளிநடப்பு செய்யவில்லை.

இவரின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்துள்ளது.கட்சியின் மாநில பிரிவின் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், ராஜகோபாலன் சட்டசபையில் என்ன சொன்னார் என்பதை சரிபார்க்கிறேன். ராஜகோபாலன் போன்ற ஒரு மூத்த தலைவர் ஒரு மாறுபட்ட கருத்தை எடுப்பார் என்று தான் நினைக்கவில்லை என்றும் சுரேந்திரன் கூறினார்.

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்