சுமி நகரில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் அனைவரும் வெளியேற்றம்…! – மத்திய அரசு
உக்ரேனில் 13-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள்ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரேனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் சுமி நகரில் சிக்கியிருந்த அனைத்து இந்திய மாணவர்களும் வெளியேறி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.