இந்தியா முழுவதும் 31-ம் தேதி வரை அனைத்து பயணி ரயில் ரத்து .!
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் ரயில் சேவையையும் 31-ம் தேதி வரை இந்திய ரயில்வே நிறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபர் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்தார்.அதேபோல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு ரயிலில் சென்றார்.
இதுபோன்ற கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் ரயிலில் பயணம் செய்வதால் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.இதனால் இந்திய ரயில்வே நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயிலையும் 31-ம் தேதி வரை நிறுத்தி உள்ளது.