அகில இந்திய கல்வி மாநாடு; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!

PMModi aiep

தேசிய கல்விக் கொள்கையின் (NEP) மூன்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் கொண்டாடும், ‘சிக்ஷா சமகம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடி, NEPஇன் மூன்றாண்டு நிறைவை கொண்டாடும் அகில இந்திய கல்வி மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக சிக்ஷா சமகம் செய்லபடும் என தொடக்க விழாவில் பிரதமர் மோடி கூறினார்.

கல்வி நாட்டின் வளர்ச்சிக்கும், நாளைய தலைவர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாடு நகர்வதிலும் கல்வி முக்கிய பங்காக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்