எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.
கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் தாமதம்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால்,இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில்,மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில்,எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு 2021-22 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று (ஜனவரி 19 ஆம் தேதி) ஆன்லைனில் தொடங்குகிறது.எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
அதன்படி,நீட் தேர்வில் தகுதி பெற்றமாணவ, மாணவிகள் https://www.mcc.nic.in/#/home என்ற இணையதளத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,வருகின்ற 27, 28 ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் .அதன்பின்னர், இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் ஜனவரி 29 ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும்,மருத்துவ கலந்தாய்வின் இரண்டாம் சுற்று பிப்.9 ஆம் தேதியும், 3 ஆம் சுற்று மார்ச் 2 ஆம் தேதி, 4 ஆம் சுற்று மார்ச் 21 ஆம் தேதியும் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து,இளநிலை,முதுநிலை அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும்,தமிழகத்தில் மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…