நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தான் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவுட்டுள்ளது.
இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளுக்கு கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுருந்தது. இதையடுத்து தூக்கிலிடத் தடைக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை இரண்டாவது முறையாக ஒத்திவைத்தது. மேலும் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…