" கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே" – நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி “கொரோனா போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே” என்று கூறியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,917 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5914 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ எனும் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று “கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே. இந்த போரில் மக்களும் நிர்வாகமும் இணைந்து போராடுகிறது” என்று கூறியுள்ளார்.