கோவாவிற்கு செல்லும் அனைத்து விமான நிறுவனங்களின் விமானம் ரத்து..!
சூறாவளி “TAUKTAE” காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் கோவாவிற்கும் அதன் விமானப் பயணங்களையும் இன்று ரத்து செய்துள்ளன.
இந்திய வானிலை மையத்தின் படி ‘டவ் தே’ சூறாவளி மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விமான பயண நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 12 விமான நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
‘டவ் தே’ புயல் குஜராத்தை நெருங்கி வருவதால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவா மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் கோவா செல்லும் விமான நடவடிக்கைகளை இன்று ரத்து செய்துள்ளன.
இதுகுறித்து கோவா விமான நிலையம் பதிவிட்ட பதிவில், கோவாவில் நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சூறாவளி “TAUKTAE” காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் கோவாவிற்கும் அதன் விமானப் பயணங்களையும் இன்று ரத்து செய்துள்ளன என பதிவிட்டுள்ளது.
கோவாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவு சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு மணிப்பால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிக்சை அளிக்க முடியாது எனவும், நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் இடங்களை முன்பதிவு செய்யவும், அவசர காலங்களில் மணிப்பால் தொழில்நுட்ப வல்லுநர்களை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Considering the prevalent weather conditions in,around,enroute to Goa due, Very severe cyclone “TAUKTAE” all Airlines have cancelled their flight operations to and from Goa for today. @AAI_Official @MoCA_GoI @aairedwr @PIB_India @PIB_Panaji @TOIGoaNews @ANI @PTI_News
— Goa Airport (@aaigoaairport) May 16, 2021