அனைத்து அதானி குழும நிறுவன பங்கு விலை கடும் சரிவு!
புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் கடும் சரிவு.
அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றனர். விலை சரிந்து கொண்டிருக்கும் அதானி குழும பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அதானி நிறுவன பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததால் தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதிக்கு இழப்பு என புகார் தெரிவிக்கப்படுகிறது.
அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ள இ.பி.எஃப் தொகையை திரும்ப பெறுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் விலை குறைந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரான கவுதம் அதானி குறித்து, மிகப்பெரிய அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதானி குழுமம் பங்குகளைக் கையாளுதல் மற்றும் மோசடி அடிப்படையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் அதானி பங்குகள் மளமளவென சரிந்து மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த சமயத்தில், தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் அனைத்து பங்குகளும் கடும் சரிவை கண்டு வர்த்தகமாகி வருகிறது.