இந்தியாவில் ஒரே நாளில் 7,633 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், இந்தியாவில் ஒரே நாளில் 7,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 9,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று தொற்று பாதிப்பு 7,633 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60,313 லிருந்து 61,233 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை 5,31,141 லிருந்து 5,31,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,35,772 லிருந்து 4,42,42,474 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,27,271 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 749 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…