” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் ! – காங்கிரஸ் எம்.எல்.ஏ
” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 1152 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் மது அருந்தினால் தொண்டையில் கொரோனா வைரஸ் ஒழியும் எனவே மதுக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் எழுதியுள்ளார்.
மது நிறைந்துள்ள சானிடைசர்களில் கை கழுவும் போது கொரோனா வைரஸ் அகற்றப்படும் என்கிறபோது மது குடித்தால் தொண்டையில் உள்ள கொரோனா நிச்சயம் அகற்றப்படும் என்று எழுதியுள்ளார்.