மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மதுபானம் தர உத்தரவு .!
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா உள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 15 பேர் குணமடைந்துள்ளனர்.ஒரு உயிரிழந்துள்ளார்.கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கைக்காக ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளத்தில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என பினராயி விஜயன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மது தர முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடையால் சிலர் தற்கொலை செய்ததையடுத்து பினராயி விஜயன் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.