#Breaking : நிர்பயா வழக்கு -இன்று மதியம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

- நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
- நிர்பயா பாலியல் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
கடந்த 2012 -ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ,பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.பின்னர் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்பொழுது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரில் ஒரு சிறுவன்.அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.மீதமுள்ளவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.இதில் ஒருவரான ராம்சிங் தற்கொலை செய்துகொண்டார்.நான்கு பெரும் தூக்குத்தண்டணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
எனவே குற்றவாளிகளில் ஒருவரான அக்சய்குமார் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அக்ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.அவரது வாதத்தில்,இந்த வழக்கில் அக்ஷய் குமார் சிங் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.இறுதியாக நீதிபதிகள் , அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.