பப்ஜிக்கு மாற்றாக கேம்களை தேடும் இளைஞர்களுக்கு புதிதாய் தனது Fau-G கேமை நடிகர் அக்ஷய் குமார் அறிமுகம் செய்தார்.
கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இதனையடுத்து, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த நிலையில், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீனா தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் இளைஞர்கள் அதிகளவில் விளையாடும் கேம், பப்ஜி. இந்த பப்ஜி செயலியை 175 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். இந்த பப்ஜி செயலிக்கும் மத்திய மத்திய அரசு தடை விதித்த நிலையில், இதற்கு மாற்றாக கால் ஆப் டூட்டி, பிரீபயர் உட்பட பல கேம்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பப்ஜிக்கு பதில், Fau-G என்ற கேமை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அறிமுகம் செய்தார். இந்த கேம், முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்சார்பு இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் விதமாக இந்த புதிய கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…